தமிழக செய்திகள்

தேனி: முன்னாள் ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்

போடியில் முன்னாள் ராணுவ வீரரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.

போடி,

தேனி மாவட்டம் போடி ஜக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன்(வயது68). இவர் போடி காமராஜ் பஜாரில் சொந்தமாக தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 11 மணி அளவில் விடுதியில் கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு சந்தைபேட்டை வழியாக தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகே உள்ள பலகார கடையில் வீட்டிற்கு பலகாரங்கள் வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கேரள பதிவு எண் கொண்ட ஜூப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் கை, தலை, மார்பு, கழுத்துபோன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டினர் .

இதில் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்