தமிழக செய்திகள்

தேனி: மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை சுற்றுலா அனுப்பிய பேரூராட்சி நிர்வாகம்

மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

தேனி,

உழைப்பாளர்கள் தினமான மே தினத்தைக் கொண்டாடும் வகையில் தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதற்குரிய அனைத்து செலவும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 நாட்கள் சுற்றுலா செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் போக்குவரத்து செலவு தொகையாக 700 ரூபாய் வழங்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளான குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரிவு தவிர மற்ற அனைத்து தூய்மை பணியாளர்களும் சுற்றுலாவில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...