தமிழக செய்திகள்

தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு

தேனி, ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

தேனி,

தேனி, ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்ற போலீசாரை, தொண்டர்கள் தடுக்க முயன்றபோது, போலீசார் 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. அலுவலகத்திற்குள் சோதனை செய்ய சென்ற தேர்தல் பறக்கும் படை சென்றனர். அப்போது தொண்டர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசாரை அ.ம.மு.க. கட்சியினர் தாக்க முயன்றதால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தற்காப்புக்காகவே துப்பாக்கியால் சுட்டதாகவும் யாருக்கும் காயமில்லை எனவும் எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்