சென்னை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியதாவது:-
மே 2ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்று வெளியான தகவல் உண்மை இல்லை. வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை.
மே 1ந் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறினார்.