தமிழக செய்திகள்

கிளாம்பாகத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல்.!

மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக கிளாம்பாகத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவு வாசலில் மழைநீர் தேங்கியதால், வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை - திருச்சி பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அதற்குள் மழை நீர் வெளியேறுவதற்காக கல்வெட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே கிளாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஆனது ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளாம்பாகத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு