தமிழக செய்திகள்

வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு - வேளாண்துறை

வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பரவல் தொற்றைக் கையாள முடியாமால் உலக நாடுகள் திக்குமுக்காடி கொண்டிருக்கும் நிலையில் அடுத்தப் பிரச்சினையாக வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னார் ஐநா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளி படை நகர்வு குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து