தமிழக செய்திகள்

கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை; முதல் அமைச்சர் நாராயணசாமி

கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை என முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தில் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.

இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டி போட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, கஜா புயலால் புதுச்சேரியில் பெரிய பாதிப்பு இல்லை.

கஜா புயலால் காரைக்கால் பகுதியில் வீடுகள் பாதிப்படைந்து உள்ளன. காரைக்கால் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். அங்கு முகாம்களில் 4 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்