தமிழக செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: அதிமுக எம்.பி. தம்பிதுரை

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.45 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை, அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேருவது இயல்பு தான். கடந்த கால தேர்தல்களில் ராஜாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியாக தான் கூட்டணி வைத்து ஆட்சி செய்தனர். ஆனால் கூட்டணி ஆட்சி நடத்தப்படவில்லை. கூட்டு அமைச்சரவை அமைக்கவில்லை.

கூட்டணி என்பது வேறு. ஆட்சியை யார் நடத்துவது ? என்பது வேறு. ஆட்சியை அ.தி.மு.க. தான் நடத்தும், அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்களும் சரி, மக்களும் சரி கூட்டு அமைச்சரவையை ஏற்கமாட்டார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை