தமிழக செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தில் திருவெற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளின் 6 மாத அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக, 4 மாநில தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர் இதையடுத்து தேர்தல் ஆணையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், காலியாக உள்ள இதர நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலைகளைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு