தமிழக செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை இல்லை

எஸ்.புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

எஸ்.புதூர், 

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி. இது பொன்னமராவதி பகுதிக்கு செல்ல வசதியாக உள்ளதால் இதன் வழியே செல்லும் வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் வெளியூர் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ஊரின் பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டி பெயர் பலகை வைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT