சென்னை,
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யூஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரியர் தேர்வை ரத்து செய்ததில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து பல்கலை உடன் ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது இல்லை. அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று அரியர் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.