தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ஸ்ரீபெரும்புதூர் விக்னேஷ் நகரில் 25 சென்ட் இடத்தில் பழைய பொருட்களுக்கான குடோன் வைத்துள்ளார். இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் தகர செட் அமைத்து குடியிருந்து கொண்டு குடோனில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் 10-க்கும் மேற்பட்டோர் குடோனுக்கு வெளியே பழைய பொருட்களை தரம் பிரித்து கொண்டிருந்தனர்.

அப்போது குடோனில் இருந்த காகிதம், அட்டை, பிளாஸ்டிக் முதலான பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். தீ மளமளவென வேகமாக பரவி எரிய தொடங்கியது .இந்த தீ விபத்தில் உள்ளே இருந்த 3 தகர வீடுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்