தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

ஆரல்வாய்மொழியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வேலை

ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் கன்னி விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது72). இவரது மகன் விநாயக சங்கர் (32). இவருக்கு சிவாசெல்வி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

விநாயக சங்கர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால், மனைவி சிவா செல்வி வீட்டை பூட்டிவிட்டு தனது மகளுடன் லீபுரம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.

ஆரல்வாய்மொழியில் உள்ள வீட்டை விநாயக சங்கரின் தந்தை செல்வமணி தினமும் சென்று பார்வையிடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் செல்வமணி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் வெளிபக்க கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், முன்பக்க மரக்கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

நகை திருட்டு

உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் வெளியே வீசப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 தங்க மோதிரம், 1 தங்க வளையல் என 5 கிராம் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தன.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து செல்வமணி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். சப் -இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், ஜாண் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உண்டியல் பணம் திருட்டு

இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பக்கத்து தெருவில் வாடகைக்கு இருக்கும் பாணிப்பூரி வியாபாரி வீட்டில் புகுந்த திருடர்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்த சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...