கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் தி.மு.க. கைக்கூலி - விஜய் கண்டனம்

தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில் அவரது பேச்சுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also read:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு