திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் கெரேனா பாதிப்பிற்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 32 பேர் கெரேனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணமடைந்தனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியன், மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்டேர் கலந்து கெண்டனர்.
குணமடைந்த 32 பேர் ஆறு ஆம்புலன்ஸ், ஒரு பேருந்தில், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கெரேனா தெற்றில் இருந்து மீண்ட 32 பேருக்கும் பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்கள் வழங்கி, உரிய அறிவுரைகளும் கூறப்பட்டது. தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் கைதட்டி, 32 பேரையும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.