திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா கடந்த 4 ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. திருவிழாவின் 2-வது நாளில் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.