தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.5.28 கோடி வருவாய்; 1.9 கிலோ தங்கம் கிடைத்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது.

தினத்தந்தி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கேவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கேவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில் 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய், தங்கம் 1.9 கிலோ, வெள்ளி 72.25 கிலோ, பித்தளை 84.67 கிலோ, செம்பு 80.54 கிலோ மற்றும் 1922 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இணை ஆணையர் ராமு, முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து