தமிழக செய்திகள்

ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா

ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதாறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதியன்று காலை 10.35 மணி முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 5-ந் தேதியன்று ஆண்டாள், ரங்க மன்னார் திருக்கல்யாணம் ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. காலையில் செப்பு தேரில் ஆண்டாள், ரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள், ரங்க மன்னார் திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்