தமிழக செய்திகள்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

பெரம்பலூரில் பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 5-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி காலை 10 மணியளவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலையில் பக்தி உலாத்தல், ஒய்யாலி நடை அலங்காரத்துடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பின்னர் இரவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கும்-தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட நியமனக்குழு தலைவர் கலியபெருமாள் மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்-தாயாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு