தமிழக செய்திகள்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருடசேவை:திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

தென்திருப்பேரை:

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் 8-வது ஸ்தலமாக விளங்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கடந்த10-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

நேற்று முன்தினம் 5-ம்நாள் விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி பெருமாள் மாட வீதி புறப்பாடு நடந்தது. காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாகுதி திருவாராதனம், சாத்துமுறை நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, மாலை 5.30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் வாகன குறட்டிற்கு வந்து அலங்காரம் நடைபெற்றது.

கருடசேவை

இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் மாட வீதி மற்றும் ரதவீதிகளில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீ தரன்சுவாமி, நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 19-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்