தமிழக செய்திகள்

'திருமாவளவன் பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்' - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அழைப்பு

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகி பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூட்டணியில் இருப்பதன் மூலம் அவர் நினைப்பது போல் சமூகநீதியோ அல்லது பட்டியலின மக்களுக்கு எந்த ஒரு நன்மையோ நடக்காது என்பதை இரண்டு வருட ஆட்சியில் பார்த்து வருகிறார்.

எந்த ஒரு பட்டியலின மக்களின் பிரச்சினைக்கும் இந்த அரசாங்கத்தால் தீர்வு காண முடியவில்லை. பின் எதற்காக திருமாவளவன் அங்கு இருக்கிறார்? எனவே, திருமாவளவன் தி.மு.க. கூட்டணியை விட்டு விலகி பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை