தமிழக செய்திகள்

திருவள்ளூர்: திருத்தணி அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக வாலிபர் கைது

திருத்தணி அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அகூர் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் வீட்டிற்கு பின்பக்கத்தில் 9 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.   

SCROLL FOR NEXT