தமிழக செய்திகள்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு மகா அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு மகா அபிஷேகம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

இதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில் நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களாலும் அபிஷேகம் நடைபெற்றது.

அதேபோல் சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்