தமிழக செய்திகள்

தீபத்திருவிழாவிற்காக முழுவீச்சில் தயாராகும் திருவண்ணாமலை கோவில்

மகாதீபத் திருவிழாவிற்காக ஏழரை டன் பூக்களைக் கொண்டு அண்ணாமலையார் கோவிலை அழகுப்படுத்தும் பணிகள் முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. காலையில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகளை கோவில் ஊழியர்கள் மலைக்கு எடுத்துச் சென்றனர்.மேலும் மகாதீபத் திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

அந்தூரியம், ரோஜா, செந்தாமரை, வெண் தாமரை உள்ளிட்ட மலர்கள் அடங்கிய ஏழரை டன் பூக்களைக் கொண்டு கோவிலை அழகுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வண்ண, வண்ண மலர்களைக் கொண்டு திருக்கோவில் மதில் சுவர்கள் தூண்கள் உள்ளிட்டவற்றை அலங்காரம் செய்யும் பணிகள் முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்