தேனி,
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அ.தி.மு.க.வின் எம்.பி. தம்பிதுரை, திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் யார் என வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 10ந்தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல் அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.