தமிழக செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல்; குக்கர் சின்னம் ஒதுக்க தினகரன் கோரிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

கருணாநிதி மறைவு காரணமாக காலியான திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வேட்பு மனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 10 ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு செய்துள்ளார்.

இனிவரும் தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தையே ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். தினகரனின் இந்த மனு வரும் 7ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்