தமிழக செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் இறுதி முடிவு எடுப்பார் மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மக்கள் நீதி மய்யத்தின் 2-வது செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

சென்னை,

கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், தங்கவேல், ரங்கராஜன், சினேகன், ஸ்ரீபிரியா, மவுர்யா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளரை களம் இறக்கலாமா? வேண்டாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்திருப்பதால், கட்சியின் மாவட்ட, தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்களின் தேர்தல் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

* திருவாரூர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண விநியோகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

* திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவினை, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எடுக்கவேண்டும் என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி