தமிழக செய்திகள்

திருவாரூர்: நீர்நிலைகளை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அகற்றம்....!

திருவாரூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

தினத்தந்தி

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பெதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.

ஆப்போது நீடாமங்கலம் காளாச்சேரி கிராமத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை ஜேசிபி எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு பணிக்காக அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,

கோர்ட்டு உத்தரவுபடி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காளாச்சேரி பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட பயிர்கள் அகற்றப்பட்டு உள்ளது. இதுபோன்று பூவனூர் , ராயபுரம் கிராமங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்