தமிழக செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 10ந்தேதி அறிவிக்கப்படும்: தம்பிதுரை எம்.பி.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 10ந்தேதி அறிவிக்கப்படும் என திருவாரூரில் தம்பிதுரை எம்.பி. தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

திருவாரூர்,

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க.வின் எம்.பி. தம்பிதுரை, திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் யார் என வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 10ந்தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கான ஆட்சி மன்ற கூட்டம் நடைபெறுவது தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் ஓரிரு நாட்களில் பெயர் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தம்பிதுரை எம்.பி. 10ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்ற தகவலை கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இடைத்தேர்தலை நடத்துவதற்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியதுடன் தேர்தலை நடத்துவது என்பதும், தேர்தலை ஒத்தி வைப்பது என்பதும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டிய முடிவு என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்