தமிழக செய்திகள்

மாவட்ட விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் பள்ளி மாணவர்கள் சாதனை

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

தினத்தந்தி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். டென்னிக்காய்ட் போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் 6 அணிகளும், மாணவிகள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் 6 அணிகளும் என இப்பள்ளியை சேர்ந்த 12 அணிகளும் முதலிடம் பெற்றன. எறிபந்து போட்டியில் மாணவர்கள் இளையோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவிகள் இளையோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர். கைப்பந்து போட்டியில் மாணவிகள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் என 3 பிரிவில் முதலிடமும், மாணவர்கள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் என 3 பிரிவில் 2-ம் இடமும், பேட்மிண்டன் போட்டியில் மாணவிகள் இளையோர், மூத்தோர் என 2 பிரிவில் முதலிடமும், மாணவர்கள் இளையோர் பிரிவில் முதலிடமும், பீச் வாலிபால் போட்டியில் மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர்.

முதலிடம் பெற்ற 22 அணிகளும் மாநில அளவில் நடைபெறும் குழு விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகியாகிய வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை