தமிழக செய்திகள்

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தோகைமலை அருகே உள்ள வெள்ளைப்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகா மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின்னர் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றி பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். இதில், விழாக்கமிட்டியினர், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்