தமிழக செய்திகள்

அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை

அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜையும், வடக்கு 3-ம் வீதி மகிமைநாயகி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கறம்பக்குடி முருகன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதேபோல் மழையூர், பொன்னன் விடுதி, முள்ளங்குறிச்சி, வடக்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே இடையன்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள பொன்-புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை மற்றும் மாலையில் 1,001 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர். கீரமங்கலம் அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் கொத்தமங்கலம் கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்