தமிழக செய்திகள்

திருவிளக்கு பூஜை

கடையம் அருகே கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கடையம்:

கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் சிறப்பு பூஜை தொடங்கி மாலை 1,251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விசாக திருநாளான 2-ந்தேதி காலையில் பால்குடம் மற்றும் பால் அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை