சென்னை,
தவெக தலைவர் விஜய், வில்லிவாக்கம் தொகுதியில் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பிரசாரத்தை கைவிட்டு, பனையூர் திரும்பினார். இதனால் விஜய்யை எதிர்பார்த்து காத்திருந்த வில்லிவாக்கம் தொகுதி மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், வில்லிவாக்கத்துக்கு விஜய் வராததற்கான காரணம் குறித்து வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளரும், தவெக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
தலைவர் விஜய் வரும் எந்த சாலையையும் காவல்துறையினர் பிளாக் செய்யவே இல்லை. மக்கள் அளவுக்கு அதிகமாக கூடட்டும், நெருக்கடியால் இடிச்சிக்கட்டும்.. இடிச்சிட்டு கீழே விழுந்தா எங்க தலைவர் மேல பழிபோட்டு இன்னொரு கரூர் சம்பவம் கொளத்தூரில் நடக்கணும்னு முற்பட்டாங்க. அதனால்தான் எங்கள் கொளத்தூர் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு மற்ற பயணங்களையும் ரத்து செய்துவிட்டோம். இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது என தேர்தல் அதிகாரியிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.