தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் முருகேசன் (வயது 54). இவர் காயல்பட்டினம் பைபாஸ் ரேட்டில் உள்ள சுடலைமாடசாமி கேவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை இவரை மர்ம நபர்கள் வெட்டிக் கெலை செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கேவில் பூசாரி முருகேசன் கெலை தெடர்பாக ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து(26), மாரிமுத்து மகன் மாரிசெல்வம்(28), செல்வராஜ் மகன் சுகுமார்(26), மேலஆத்தூர் கொழுவை நல்லூரை சேர்ந்த பெருமாள் மகன் சங்கர்(எ) சங்கரவேல்(54) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு