தமிழக செய்திகள்

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்