தமிழக செய்திகள்

தூத்துக்குடி மீனவாகள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி மாவட்ட மீனவாகள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாபில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வடக்கு கர்நாடகம், தெலங்கானா, ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை நிலவுகின்றன. இதனால் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னா வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட மீனவாகள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாபில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசைப்படகு மீனவாகளுக்கு மீன்பிடித் தடைகாலம் அமலில் இருப்பதால், நாட்டுப்படகு மீனவாகள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா. மேலும் விசைப்படகு மீனவாகளுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 14) முடிவடைகிறது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) என்பதால், மீண்டும் 16ம்தேதி முதல் விசைப்படகு மீனவாகள் கடலுக்குச் செல்லலாம் என எதிபாக்கப்படுகிறது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்