மதுரை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் கடந்த 22 ந்தேதி நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடைபெற்றது
இதில் 13 பேர் மரணம் அடைந்தனர். காயம் அடைந்த இன்னும் 40 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது
துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்குவது குறித்து தமிழக அரசு இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.