தமிழக செய்திகள்

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இளையரசனேந்தல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் கணேசன் (வயது 47), தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 8ம்தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கெண்டிருந்தார். இளையரசனேந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மேதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த பாண்டி மகன் உத்தண்டகுமார்(20) என்பவரிடம் விசாரணை நடத்தினார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்