தமிழக செய்திகள்

தூத்துக்குடி: வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா....!

தூத்துக்குடி அருகே உள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது.

தினத்தந்தி

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளையில் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பெருங் கொடை விழா கடந்த 1-ம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, 108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊர்வலம், கோலாட்டம், கரகாட்டம் கேரளா நடனங்கள்,சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனியும் நடைபெற்றது.

மேலும் முத்தாரம்மன் சப்பர பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா,வில்லிசை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து