தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் வீட்டில் தங்கநகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் வீட்டில் தங்கநகை, வெள்ளி பொருட்கள் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

லாரி செட் உரிமையாளர்

தூத்துக்குடி முத்தம்மாள்காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 64). இவர் லாரி செட் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றாராம். நேற்று மாலையில் வீட்டின் முன்பகுதியில் விளக்கு போடுவதற்காக வீட்டில் வேலை பார்க்கும் பெண் வந்தாராம். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்தவர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சிப்காட் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அங்கு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தடிவருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்