தமிழக செய்திகள்

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்கள் பற்றி தெரியவில்லை - சீமான்

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை என்று சீமான் கூறினார்.

தினத்தந்தி

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டுக்கு வந்தார். அங்கு நெல்லை கண்ணன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தன்னல நோக்கமில்லாத தமிழ் இனம் சார்ந்த மாமனிதர் நெல்லை கண்ணன். சங்க இலக்கியம், தொல்காப்பியம், நவீன இலக்கியம் என அனைத்தும் விரல் நுனியில் வைத்திருந்தார். தமிழ்த்தாய் தனது செல்ல மகனை, அன்பு மகனை இழந்து விட்டார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை. நெல்லை கண்ணன் மறைவு தமிழ் பேருலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்