தமிழக செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பியய்யா. இவருடைய மகன் பாலமுருகன் (வயது29). கடந்த மார்ச் மாதம் அதே பகுதியில் உள்ள மாரியம்மன்கோவிலில் நாடகம் நடந்தபோது ஏற்பட்ட தகராறில்

அதே பகுதியை சேர்ந்த நீதி (38) என்பவர் கொலை செய்யப்பட்டா. இது தொடர்பாக வாட்டாத்திக்கோட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

பாலமுருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து பாலமுருகன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பாலமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதற்கான ஆவணங்களை புதுக்கோட்டை கிளை சிறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து கிளை சிறையில் இருந்த பாலமுருகனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்