தமிழக செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம்

அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 48). இவர் கடந்த மாதம் அந்த பகுதியில் இளநீர் வியாபாரம் செய்யும் குபேந்திரன் என்பவரை மிரட்டி ரூ.1,000-த்தை பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள பாபுவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.