தமிழக செய்திகள்

ஏரியூர் அருகேமின்னல் தாக்கியதில்2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்

தினத்தந்தி

ஏரியூர்:

ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை கெண்டயனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமண் காட்டில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வெள்ளமண் காடு பகுதியை சேர்ந்த தூங்கப்பன் (வயது 80), அவருடைய மகன் ஆண்டியப்பன் (55) ஆகியோரது கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் கூரை வீட்டில் இருந்த நவதானியங்கள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் ஆடுகள் மேய்க்க சென்று விட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து பென்னாகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் மின்னல் தாக்கி எரிந்த வீடுகள் மீது தண்ணீர் அடித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். எனினும் 2 கூரை வீடுகளும், வீட்டிலிருந்த தானியங்கள், துணிமணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து