தமிழக செய்திகள்

டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு - பெண் படுகாயம்

செங்குன்றம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயமடைந்த பெண் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினத்தந்தி

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தன். இவருடைய மகன் தமிழன் (வயது 22). இவர், வடகரையிலுள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இவர், தன்னுடைய பெண் நண்பரான தீபிகா உடன் மீஞ்சூர்-வண்டலூர் புறவழிசாலையில் செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி பேசிகொண்டிருந்தார்.

அப்போது மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த டிப்பர் லாரி, இவர்கள் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தீபிகா, ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான உமேஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது