தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்; வியாபாரி பலி

கோவில்பட்டியில் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வியாபாரி பலியானார்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் வியாபாரி பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

கோவில்பட்டி ஜோதி நகர் 3-வது தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தமிழரசன் (வயது 53). வியாபாரி. இவர் சைக்கிளில் சுண்டல், வடை விற்பனை செய்து வந்தார்.

நேற்று பகல் 2 மணி அளவில் புதுரோடு சந்திப்பில் சைக்கிளில் அவர் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார்.

சாவு

தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்- இன்ஸ் பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகேசன் (வயது 49) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான தமிழரசனுக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவியும், செல்வ ஜோதி (24) என்ற மகளும் யுவன் சங்கர் ( 16) என்ற மகனும் உள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்