திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனரால் துவங்கப்பட்டது. இளநிலை பட்டப்படிப்பில் ஆறு துறைகளையும், முதுநிலை பட்டப்படிப்பில் ஆறு துறைகளையும் கொண்டுள்ளது. இக்கல்லூரி NBA , TCS அங்கீகாரம் மற்றும் ISO 9001:2015 தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.
தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை( DS-IR ) இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத் துறைக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
என்ஜினீரியங் படிப்பில் கட்டவியல் துறை ( Civil ), இயந்திரவியல் துறை
( Mechanical ), கணினித்துறை ( CSE ), மின் மற்றும் மின்னணுத் துறை ( EEE ), தகவல் தொழில் நுட்பத்துறை ( IT ), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ( ECE ) மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பில் கணினித்துறை ( MECSE ), தகவல் தொழில் நுட்ப துறை ( M.Tech ), ஆற்றல் சார் மின்னணுவியல் மற்றும் டிரைவ்ஸ் ( MEStructural ), வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு பொறியியல்
( MEVLSI Design ) மற்றும் வணிக நிர்வாகத்துறை( M.B.A ) ஆகிய பிரிவுகள் உள்ளன.