தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 22ம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

தினத்தந்தி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து