தமிழக செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சோளிங்கர் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தினத்தந்தி

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி திரவுபதி அம்மன், அர்ஜுனன் சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாலை திரவுபதி அம்மன், அர்ஜுனன் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து பட்டாடை, தங்க ஆபரணங்கள் அணிவித்து மலர்மாலை அலங்காரம் செய்யப்பட்டு மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்